இரெபதி தாசு
இரெபதி தாசு | |
---|---|
உறுப்பினர், அசாம் சட்டப் பேரவை | |
பதவியில் 1972 - 1978 | |
முன்னையவர் | எசு. மேதி |
பின்னவர் | இலக்சயதர் சௌத்ரி |
தொகுதி | சாலுக்பாரி |
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | சசாதர் தாசு |
பிள்ளைகள் | அச்சந்தா நியோக்கு |
உறவினர் | நாகென் நியோக்கு (மருமகன்) |
இரெபதி தாசு (Rebati Das) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியவார். அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் உறுப்பினராக இருந்தார். சலுக்பரி தொகுதியின் முன்னாள் அசாம் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். நிதியமைச்சர் அச்சந்தா நியோக்கின் தாயாராகவும் , முன்னாள் அமைச்சர் நாகென் நியோக்கின் மாமியாராகவும் இரெபதி தாசு அறியப்படுகிறார். [1] [2] [3]
அரசியல் வாழ்க்கை
[தொகு]1972 ஆம் ஆண்டு நடைபெற்ற அசாம் சட்டமன்றத் தேர்தலில் சலுக்பரிக்கான இந்திய தேசிய காங்கிரசு கட்சி வேட்பாளராக இரெபதி தாசு இருந்தார். அத்தேர்தலில் இவர் 8809 வாக்குகளைப் பெற்றார், மொத்த வாக்குகளில் இது 38.35%. ஆகும். இத்தேர்தலில் 3045 வாக்குகள் வித்தியாசத்தில் தனது சுயேச்சைப் போட்டியாளரை தோற்கடித்தார். 1978 ஆம் ஆண்டு நடைபெற்ற அசாம் சட்டமன்றத் தேர்தலில் இவர் மறுதேர்தலை நாடினார். இத்தேர்தலில் இவர் 3550 வாக்குகளைப் பெற்றார். இது மொத்த வாக்குகளில் 8.67%. ஆகும். தேர்தலில் மூன்றாவது இடத்தைப் பிடித்தார். இத்தேர்தலில் சனதா கட்சி வேட்பாளர் இலக்சயதர் சவுத்ரி வெற்றி பெற்றார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Jalukbari Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". பார்க்கப்பட்ட நாள் 2022-03-06.
- ↑ "Who's Who". பார்க்கப்பட்ட நாள் 2022-03-06.
- ↑ "Ajanta Neog from Golaghat: Early Life, Controversy & Political Career - Sentinelassam". பார்க்கப்பட்ட நாள் 2022-03-06.